கோவையில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த நண்பர்கள்: தட்டி கேட்டவருக்கு தர்ம அடி.!

மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்திய நண்பர்களை கண்டித்த சிவில் இன்ஜினியருக்கு சரமாரி அடி உதை 2-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்திய நண்பர்களை கண்டித்த சிவில் இன்ஜினியருக்கு சரமாரி அடி உதை 2-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை வடவள்ளி அடுத்த பொம்மனாம் பாளையத்தைச் சேர்ந்தவர் சித்தார்த் 26, சிவில் இன்ஜினியர் நேற்று இரவு இவருடைய வீட்டிற்கு வந்த நபர்கள் மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்கள் மது போதையில் கும்மாளமிட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நண்பர்களைக் கண்டித்துள்ளார்.

பின்னர் அனைவரும் திரும்பிச் சென்று விட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை சித்தார்த் வீட்டுக்கு வந்த அவரது நண்பர்கள் 4 பேர் சித்தார்த்திடம் நண்பர்கள் என்றும் பாராமல் எப்படி நீ எங்களைத் திட்டலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அவர்கள் சித்தார்த்தை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கி விட்டுச் சென்றனர்.

இதில் அவருக்கு மூக்கு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சித்தார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அஜீத்குமார் 25,விக்னேஷ் 27, ஆகிய இருவரைக் கைது செய்தனர். தலைமறைவான நீலவேந்தன், ஹரிஹரன், ஆகியோரை தேடி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...