கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..!

கோவை மாநகராட்சி சுகாதார வளாகத்தில்‌ பயன்பாட்டிற்கு பொதுமக்களிடம்‌ கூடுதல்‌ கட்டணம் வசூல்‌ செய்த ஒப்பந்த பணியாளர்களிடம்‌ ரூ.10,000/- அபராதம்‌ விதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று (29.11.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌. 74க்குட்பட்ட பகுதியில்‌ அமைந்துள்ள மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ சுகாதாரப்‌ பணியாளர்களின்‌ வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்த ஆணையாளர்‌ அவர்கள்‌, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌ வீடுவீடாகச்‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றுவதையும்‌, தேவையில்லாத பொருட்களை அகற்றும்‌ பணிகளில் ஈடுபட்டு வருவதையும்‌, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறியும்‌ பணிகளில்‌ ஈடுபடுமாறு சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



அதன்‌ பின்னர்‌, சிலதினங்களுக்கு முன்னர்‌ பெய்த கனமழையினால்‌ காந்திபுரம்‌ நகர பேருந்து நிலையத்திலுள்ள மேற்கூரை இடிபாடுகளை சரிசெய்யும்‌ பணியினை பார்வையிட்டார்‌. தொடர்ந்து, மத்தியப்‌ பேருந்து நிலையங்களில்‌ பழுதாகியுள்ள இடிபாடுள்ள சுவர்களை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்யுமாறு மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



இதனை தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள சுகாதார வளாகங்களில்‌ கூடுதலாக கட்டணம்‌ வசூலித்த இரண்டு ஒப்பந்ததாரர்களிடம்‌ தலா 5,000 வீதம்‌ இரண்டு ஒப்பந்ததாரா்களிடம்‌ ரூ.10,000/- அபராதம்‌ விதித்தார்‌.



மேலும், கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.50 க்குட்பட்ட டாடாபாத்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி குடியிருப்பின்‌ உறுதித்தன்மையைப் பெறுவதற்கான ஆய்வு செய்தார்‌.

பின்னர்‌, ராஜவீதியிலுள்ள நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையம்‌ மற்றும்‌ அருகிலுள்ள சுகாதார வார்டு அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, உதவி பொறியாளர்கள்‌ குமரேசன்‌, ஜெயின்ராஜ்‌, ஏஞ்ஜலினா, சுகாதார ஆய்வாளர்கள்‌ பவுன்ராஜ்‌, சலைய்த்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...