கோவை மாநகராட்சி சுகாதார வளாகத்தில் பயன்பாட்டிற்கு பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த ஒப்பந்த பணியாளர்களிடம் ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 74க்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளர்களின் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்த ஆணையாளர் அவர்கள், மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபடுமாறு சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் பின்னர், சிலதினங்களுக்கு முன்னர் பெய்த கனமழையினால் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திலுள்ள மேற்கூரை இடிபாடுகளை சரிசெய்யும் பணியினை பார்வையிட்டார். தொடர்ந்து, மத்தியப் பேருந்து நிலையங்களில் பழுதாகியுள்ள இடிபாடுள்ள சுவர்களை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்யுமாறு மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள சுகாதார வளாகங்களில் கூடுதலாக கட்டணம் வசூலித்த இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் தலா 5,000 வீதம் இரண்டு ஒப்பந்ததாரா்களிடம் ரூ.10,000/- அபராதம் விதித்தார்.

மேலும், கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.50 க்குட்பட்ட டாடாபாத் பகுதியிலுள்ள மாநகராட்சி குடியிருப்பின் உறுதித்தன்மையைப் பெறுவதற்கான ஆய்வு செய்தார்.
பின்னர், ராஜவீதியிலுள்ள நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அருகிலுள்ள சுகாதார வார்டு அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்௧கரா இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், ஜெயின்ராஜ், ஏஞ்ஜலினா, சுகாதார ஆய்வாளர்கள் பவுன்ராஜ், சலைய்த் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.