கோவையில் வரத்து அதிகரிப்பால் குறைந்து வரும் தக்காளி விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

கோவையில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக மழை இல்லாததால் தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் தக்காளி விலையும் குறைந்துள்ளது.

கோவையில் கடந்த வாரம் பெய்து வந்த தொடர் மழையின் காரணத்தால் தக்காளி வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் பல மடங்கு உயர்ந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் தக்காளி ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டது. உழவா் சந்தை உள்பட பல்வேறு இடங்களில் தக்காளி கிடைக்காமல் நுகா்வோா்கள் பாதிக்கப்பட்டனா். நுகா்வோா்களுக்கு எளிதில் தக்காளி கிடைக்கும் விதமாக பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக மழை இல்லாததால் தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் கிலோ ரூ.120 க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.50 முதல் 55 ஆக குறைந்துள்ளது. உழவா் சந்தைகளில் ரூ.50 முதல் ரூ.55க்கும், வெளி சந்தைகளில் ரூ.60 முதல் 70க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடா்பாக வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் மழையின் தாக்கத்தால் உழவா் சந்தைகளுக்கு கடந்த வாரம் 15 டன் தக்காளி வரத்து காணப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் தக்காளி வரத்து 20 டன் ஆக உயா்ந்துள்ளது. இதனால் விலையும் ரூ.50 முதல் ரூ.55 ஆக உள்ளது என்றனா்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...