பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி சேர்ந்த தம்பதியினர் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு சார் ஆட்சியரிடம் மனு..!

கடந்த எட்டு வருடங்களாக தங்களது மகன் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி சேர்ந்த தம்பதியினர் மகனை கண்டுபிடித்து தருமாறு சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக சார் ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி சேர்ந்த அர்ஜுனன், கலைச்செல்வி தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது மகளுக்கு கடந்த 13 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துவிட்டனர். மகன் சந்தோஷ் குமார் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. பயோடெக்னாலஜி பயின்று வந்தார். திடீரென கல்லூரிப் படிப்பை தொடராமல் நின்று விட்டார்.

இந்நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களான விடுதலை முன்னணியை சேர்ந்த கணபதி, சுல்தான்பேட்டை சேர்ந்த செல்வராஜ், கோவை உக்கடம் பார்த்திபன், மருத்துவர் தினேஷ் ஆகியோர் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் ஆவர். இவர்கள் எங்களது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். இதில் செல்வராஜ், கணபதி மட்டும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்கள். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பின்னர், எனது மகனை கணபதி, செல்வராஜ் போன்றோர்கள் மூளைச் சலவை செய்து ஆயுதப் புரட்சிக்கு கொண்டு போய் சேர்த்து விட்டார்கள் என தெரிய வந்தது. கடந்த எட்டு வருடங்களாக எனது மகன் சந்தோஷ் குமார் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

ஆகவே, சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உரிய நடவடிக்கை எடுத்து மகனை மீட்டுத் தருமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...