திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ விஜயகுமார் கையை வெட்டப் போகிறேன்..! பதாகையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு!

திருப்பூர் வடக்கு எம்எல்ஏவின் கையை வெட்டப் போவதாக பதாகைகளை ஏந்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ விஜயகுமார் கையை வெட்டப் போவதாக பதாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் கணக்கம்பாளையம் அடுத்த நாதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாககுமார்(50). இவர் வேலுச்சாமி என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடு போயிருந்தது.

பின்னர், இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வீட்டு உரிமையாளர் மீது பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமார் இவர்களை கைது செய்ய வேண்டாம் என பெருமாநல்லூர் போலீசாரிடம் கூறியுள்ளதாகவும், அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்யவில்லை.

பின்னர் வழக்கை திரும்பப் பெற்றால், என்னுடைய வீட்டில் திருட்டுப்போன அனைத்து பொருட்களையும் வாங்கி தந்துவிடுவதாக போலீசார் தெரிவித்தனர். அதை நம்பி நானும் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டேன். ஆனால் எனது உடமைகளை இதுவரை எனக்கு திருப்பி தரவில்லை.

இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, எனது வீட்டில் பொருட்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கும் திருப்பூர் வடக்கு எம்எல்ஏவின் கையை வெட்டப் போவதாக பதாகைகளை ஏந்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாககுமார் மனு அளிக்க வந்தார். இதையடுத்து, போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...