திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு..!

உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக்(32) பனியன் தொழிலாளி. இவரது மனைவி தஸ்லிமாபானு. இவர்களுக்கு முகமது அர்ஸத், ஆபிதா பானு என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே, கடந்த ஆண்டு தஸ்லிமா பானு ஒரு விபத்தில் இறந்து விட்டார். இந்நிலையில், முகமது ரபிக் வீட்டிலிருந்த 2 லட்சம் பணத்தையும், 15 பவுன் நகையையும் தனது மனைவியின் சகோதரியான அபிராமியிடம் நம்பிக்கையின் பேரில் கொடுத்து வைத்துள்ளார்.

தற்பொழுது குழந்தைகளின் படிப்பிற்காக அந்த தொகையையும், நகையையும் திருப்பி கேட்டபோது அபிராமி அதனை திருப்பித் தராமல் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து முகமது ரபிக் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். அதன் மேலும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், முகமது ரபிக் இன்று தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, பையில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து தன் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார்.



அப்போது, உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.



பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...