பொள்ளாச்சி அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு..!

சின்ன தொப்பம்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அடையாள அட்டைகளை திரும்பக் கொடுக்க போவதாக பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன தொப்பம்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அடையாள அட்டைகளை திரும்ப கொடுக்க போவதாக பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன தொப்பம்பட்டி கிராமத்தில் புதிய டாஸ்மார்க் கடை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அங்கு திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், சின்ன தொப்பம்பட்டி கிராமத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் புதிய டாஸ்மார்க் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பணிகளுக்காக பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அந்த வழியில் நடந்து செல்லும் நிலை உள்ளது. டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

எனவே, குடியிருப்பு அருகே டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று தெரிவித்த பொதுமக்கள், எதிர்ப்பை மீறியும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டால் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை அரசிடம் திருப்பி கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...