பொள்ளாச்சி அருகே வழக்கறிஞரை தாக்கிய 3-பேர் சிறையில் அடைப்பு.!!

மகாலிங்கபுரத்தை அடுத்த ஆறுமுகம் நகர் பகுதியில், மது அருந்த சென்ற வழக்கறிஞரை செங்கற்களை கொண்டு தாக்கிய நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் 3-பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே மது அருந்த சென்ற வழக்கறிஞரை செங்கற்களை கொண்டு தாக்கிய நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் 3-பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை அடுத்த ஆறுமுகம் நகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகன் சத்யராஜ் (35). இவர் பொள்ளாச்சி கோர்ட்டில் ஜூனியர் வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சத்யராஜ் சின்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் மது அருந்துவதற்காகச் சென்றார். அப்போது அங்கு அவர்கள் டேபிளுக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் சத்யராஜிடம் உன்னை இந்த பாரில் இதற்கு முன்பு பார்த்தது இல்லையே என்று ஒருமையில் பேசி உள்ளனர்.

இதையடுத்து சத்தியராஜ் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சத்யராஜ் தான் இது குறித்து புகார் அளித்து உன் மேல் நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

நேற்று மதியம் மீண்டும் அதே பாருக்கு மது அருந்துவதற்காக சத்தியராஜ் சென்றார். அப்போது முந்தையநாள் தகராற்றில் ஈடுபட்ட நபர்கள் மீண்டும் சத்யராஜிடம் தகராற்றில் ஈடுபட்டதோடு செங்கற்களால் அடித்தனர்.

இதில் வக்கீல் சத்யராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து சத்யராஜ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி மரபேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் விஷ்ணு (26), குமார் என்பவரின் மகன் பிரசாந்த்(23) மற்றும் சலீம் என்பவரின் மகன் முகம்மது செரிப் (30) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...