'எங்களுக்கும் ஒரு வீடு' -கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்.!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, வீட்டு மனை பட்ட மற்றும் வசிக்க வீடு வேண்டும் என்று கோரிக்கை மனுவை கோவை ஆட்சியரிடம் கொடுக்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, வீட்டு மனை பட்ட மற்றும் வசிக்க வீடு வேண்டும் என்று கோரிக்கை மனுவை கோவை ஆட்சியரிடம் கொடுக்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.



மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தமிழக முதல்வரின் இரண்டு நாள் சுற்றுப் பயணம் கோவையில் நிறைவடைந்த நிலையில், இன்று கோவையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்ட மற்றும் வசிக்க வீடு வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கோவை ஆட்சியரிடம் அளிக்க வந்ததால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு காட்சியளித்தது.



தனிநபர் மனுக்கள் மட்டுமின்றி குறிப்பாக வீட்டுமனை பட்ட வழங்கக் கோரி – வெங்கடாபுரம், ஈச்சனாரி, சுப்ரமணியபுரம், வேலாண்டிபாளையம் போன்று கோவை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து அனைத்து பொதுமக்களும் வந்ததால் மக்கள் வெள்ளத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காட்சியளித்தது.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது:-

25-வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்காத நிலையில், கோவை வந்த தமிழக முதல்வர் வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக நம்பிக்கை அளித்ததின் பெயரில் இன்று எங்கள் கோரிக்கை மனுவை அளிக்க வந்துள்ளோம். கண்டிப்பாகத் தமிழக முதல்வர் கூறியதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளோம்.

இவ்வாறு மனு அளிக்க வந்த பொதுமக்கள் கூறினர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...