கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்: பாதுகாப்புகளைத் தீவிரமாக கடைபிடிக்க அறிவுறுத்தல்..!

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா நோய்த் தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் முதன்முறையாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டுக்குச் சென்று வந்த கல்லூரி மாணவிக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, மே முதல் செப்டம்பா் வரை நோய்த் தொற்றுப் பரவல் அதிகமாக காணப்பட்டது. பின் நடப்பாண்டு மே மாதம் வேகமெடுத்த கொரோனா 2 ஆவது அலையால் கோவையில் அதிக அளவிலான மக்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகினா். தினசரி பாதிப்பும் 5 ஆயிரமாகக் காணப்பட்டது.

இதையடுத்து, நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டன. மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கையால் நோய்த் தொற்றுப் பரவல் செப்டம்பரில் குறையத் தொடங்கியது.

தொடா்ந்து குறைந்து வந்த கொரோனா நோய்த் தொற்று கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது. இதற்கு முகக் கவசம் அணிதல் உள்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றாததே முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா 2வது அலையால் கோவையில் 2 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி. அருணா கூறியதாவது:-

கோவையில் 100க்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் 100ஐ கடந்தது. இதனைத் தொடா்ந்து நோய்த் தொற்றுப் பரவல் மெல்ல அதிகரித்தே வருகிறது.

நோய்த் தொற்று தீவிரமாக இருந்தபோது பொதுமக்கள் கடைப்பிடித்த முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தற்போது பின்பற்றப்படுவதில்லை.

தற்போது, பல்வேறு நாடுகளில் புதிய நோய்த் தொற்று பரவி வரும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றினால் மட்டுமே நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும்.

எனவே, கொரோனா நோய்த் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியம் செய்யாமல் பொதுமக்கள் தீவிரமாக கடைபிடித்தால் மட்டுமே நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க முடியும் என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...