திருப்பூர் அருகே வேஸ்ட் குடோன் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை..!

புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோடு அருகே வேஸ்ட் குடோன் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்சா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). இவர் அதே பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்லம். இவர்களுக்கு வெங்கடேஷ் என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

ராஜேந்திரன் வேஸ்ட் குடோன் வியாபாரம் மட்டும் இன்றி ஞாயிற்றுக்கிழமைகளில் கடுகு, சீரகம் போன்ற மளிகை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று வெங்கடேஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். பின்னர் வழக்கம்போல் ராஜேந்திரனும் அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு மளிகை பொருட்களை வியாபாரத்திற்காக கொண்டு சென்றனர்.



இதனிடையே, வியாபாரம் முடித்து இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது.



இதையடுத்து, திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ராஜேந்திரன் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாயை கொண்டு சோதனை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...