கோவையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது..!

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவருடைய தம்பி இருவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பிளஸ் 2 படித்து வருகிறார். அவருடைய தம்பி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், குனியமுத்தூர் வசந்தம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஆஷிக் (23), என்பவர் இரண்டு பேருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, அவர்கள் இரண்டு பேரையும் செல்வபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த மாணவர்களின் தந்தை கோவை மேற்கு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆஷிக் 2 மாணவர்களையும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, தற்போது பாலியல் தொந்தரவு தொடர்பாக விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக புகார் தெரிவிக்க எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...