மேலும், அவர்களிடமிருந்து 106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, புகையிலைப் பொருட்கள் விற்றவர்களிடம் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை மாநகர எல்லைக்குள் சட்டவிரோதமாக மது விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டது.
இதன் பேரில் நேற்று முன்தினம் போலீஸ் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, பெட்டி கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்கள் அருகே மது விற்பனை செய்வதாக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் (31), அரியலூர் அறிவழகன் (42), தஞ்சாவூர் மூர்த்தி (19), புதுக்கோட்டை ராஜேஷ் (29) மற்றும் ஹரிஹரன் (24) உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, புகையிலைப் பொருட்கள் விற்பதாக பி.என் புதூரைச் சேர்ந்த லட்சுமி (46), ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதி பால்பாண்டி (49), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பசுபதி (26), காமாட்சிபுரம் சித்தூர் பாண்டி (25) உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.