கோவையில் மென்பொறியாளர் மர்ம மரணம்..! ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு..!

இறந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின்படி, பீளமேடு போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.


கோவை: கோவையில் மென்பொறியாளர் மர்ம மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சய் அரவிந்த். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சிந்துஜா (29) சி.டி.எஸ்., மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே, சிந்துஜா மீண்டும் கர்ப்பமானார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தம்பதியும், குழந்தையும் இருந்தனர். சஞ்சய், மகனுடன் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, வீட்டினுள் தனியாக இருந்த சிந்துஜா, மின் விசிறியில் சேலையை கயிறு போல் கட்டியிருக்கும் போட்டோவை கணவருக்கு அனுப்பினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சய் வீட்டுக்குள் ஓடிச் சென்று பார்த்தார். உட்புறமாக தாழிடப்பட்டிருந்த அறை கதவை உடைத்து திறந்தார். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிந்துஜாவை கீழே இறக்கி, முதலுதவி செய்தார்.

இதையடுத்து, அருகே இருந்தவர்கள் உதவியுடன், மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிந்துஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இறந்த சிந்துஜாவின் தாயார் இந்திராணி கொடுத்த புகாரின்படி, பீளமேடு போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...