விரைவில் மத்திய அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்-பொள்ளாச்சியில் திமுக நெசவாளர் அணி செயலாளர் பேட்டி

மத்திய அரசு நூல் விலை ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதால் நூறு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக நெசவாளர் அணி சார்பில் விரைவில் மத்திய அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என பொள்ளாச்சியில் திமுக நெசவாளர் அணி செயலாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: மத்திய அரசு நூல் விலை ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதால் நூறு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக நெசவாளர் அணி சார்பில் விரைவில் மத்திய அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என பொள்ளாச்சியில் திமுக நெசவாளர் அணி செயலாளர் தெரிவித்துள்ளார்.

திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் விழா திமுக நெசவாளர் அணி சார்பில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம். நாகராஜன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த 15 குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கினர்.



மேலும் பெண் குழந்தைகளுக்குச் செந்தாமரை எனவும், ஆண் குழந்தைகளுக்கு அருள்நிதி என பெயர் சூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம் நாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, மத்திய அரசு நூல் விலை மற்றும் ஜிஎஸ்டி வரியை உயர்த்தியுள்ளது.

இதனால் கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், இம்மாவட்டங்களில் உள்ள நெசவாளர்கள் விசைத்தறிகள் விற்றுச் சாப்பிடவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மத்திய அரசு உடனடியாக நூல் விலை ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் இல்லை என்றால் திமுக மாநில நெசவாளர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...