பொள்ளாச்சியில் திருமணமான பெண்ணை மிரட்டிய ஆயுதப்படை காவலர் கைது.!!

பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நேசமணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நேசமணியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி. இவர் சென்னை மாநகர் பகுதியில் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்ணுக்கும் முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தால் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்குப் பின்பு அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.

இதை அறிந்த காவலர் நேசமணி அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு திருமணம் ஆனாலும் என்னுடன் வாழ வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சென்னையிலிருந்த நேசமணியைக் கைது செய்து பொள்ளாச்சி அழைத்து வந்தனர்.

பின்னர் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...