பெட்ரோல் டீசல் விலை: தமிழக அரசை கண்டித்து பொள்ளாச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!!

மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த பிறகும் தமிழக அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


கோவை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பொள்ளாச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்த பிறகும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த பிறகும் தமிழக அரசு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றது விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வரும் நிலையிலும் மாநில அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...