கிணத்துக்கடவில் கஞ்சா வியாபாரி கைது -600 கிராம் கஞ்சா பறிமுதல்.!!

கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் கஞ்சா வியாபாரி வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் கஞ்சா வியாபாரி வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், தலைமை காவலர் ஆறுமுகம், முதல்நிலைக் காவலர் குப்புசாமி ஆகியோர் அரசம்பாளையம் பிரிவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் மஞ்சப்பை வைத்தபடி வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரனையில் கிணத்துக்கடவு கிருஷ்ணசாமிபுரம் முத்துக்குமார்(40) என்பதும், கிணத்துக்கடவு பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

பின்னர் முத்துக்குமாரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...