கோவையில் இருந்து வெளி மாவட்ட, மாநிலங்களுக்குச் செல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் செலவுகளை திமுக ஏற்கும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

இதற்காக பள்ளி, கல்லூரிகளில் இருந்து முதல்வரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி வந்தால் திமுக மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்ட, மாநிலங்களுக்குச் செல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடைய செலவுகளை திமுக ஏற்றுக்கொள்ளும் என உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.



கோவை பீளமேடு பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ஒருங்கிணைந்த திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

288 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாகவும், இதில் 288 அணிகள் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வேறு மாவட்டம், மாநிலத்திற்கு விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு, சென்றுவர செலவினங்களை ஒருங்கிணைந்த திமுக ஏற்றுக்கொள்ளும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் இருந்து முதல்வரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி வந்தால் திமுக மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...