கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம்..!

பொதுமக்களை நேரில் சந்தித்த அவர், தேர்தலில் வெற்றி பெற தனக்கு வாக்கு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் நன்றி தெரிவித்தார்.

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பீளமேடு பகுதியில் உள்ள வார்டு எண் 24 (37)ல் உள்ள வினோபாஜி நகர், குருசாமி நகர், VKR நகர், தியாகி குமரன் வீதி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எம்எல்ஏ., கே. ஆர். ஜெயராம் பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற தனக்கு வாக்கு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.



இதனையடுத்து, பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவற்றைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பீளமேடு துரைசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சால்ட் வெள்ளிங்கிரி, வார்டு செயலாளர்கள் மனோகரன், லட்சுமணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...