கோவை வெள்ளலூரில் உள்ள செல்போன் கடையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனை..!

கேரளாவில் என் ஐ ஏ கைது செய்த மாவோயிஸ்டிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் சிம் கார்ட் கோவை வெள்ளலூர் பகுதியில் வாங்கப்பட்டது என்பதால் விசாரணை.


கோவை: கோவை வெள்ளலூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவர், என் ஐ ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை சோதனை நடத்தியதில் செல்போன் ஒன்று கிடைத்தது. அந்த செல்போனில் இருந்த சிம்கார்டு குறித்த விவரங்களை போலீசார் சேகரித்த போது, அந்த செல்போன் சிம் கார்டு கோவை வெள்ளலூர் பகுதியை அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள தட்சணா மொபைல்ஸ் என்ற செல்போன் கடையில் போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதையடுத்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை கோவை வெள்ளலூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியிலுள்ள அந்த மொபைல் செல்போன் கடைக்கு வந்தனர். தொடர்ந்து, கடையின் உரிமையாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், செல்போன் கடையில் உள்ள மற்ற ஆவணங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

மேலும், செல்போன் கடை உரிமையாளருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு ஏதாவது உள்ளதா.? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...