கோவையில் வரும் டிசம்பர் 10ம் தேதி வரை எந்த விதமான போராட்டம் நடத்தவும் அனுமதி கிடையாது - காவல்துறை ஆணையர்..!

இதை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவையில் வரும் டிசம்பர் 10ம் தேதி வரை எந்த விதமான போராட்டம் நடத்தவும் அனுமதி கிடையாது என்று காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

சமீபகாலமாக பல்வேறு அமைப்பினர், ஆர்ப்பாட்டம், போராட்டம், நினைவேந்தல், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளை கோவை மாநகரில் நடத்த திட்டமிட்டிருப்பதாக, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இத்தகைய செயல்கள், மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும். மேலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும். பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கும் வகையில் உள்ளன.

எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், தேவையற்ற பதட்டத்தை தவிர்க்கவும் நவ.,26 முதல் டிச.,10 வரை, எந்த ஒரு அரசியல் கட்சியினரோ, அமைப்பினரோ, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது.

இதை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவுக்கு அனைத்து அரசியல் கட்சியினரும், அமைப்பினரும், பொதுமக்கள் நலன் கருதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு, மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...