கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து கட்டிடத்தின்‌ உறுதி தன்மையை கண்டறிய நடவடிக்கை.!!

பொதுமக்கள்‌ கூடும்‌ மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின்‌ உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.


கோவை: பொதுமக்கள்‌ கூடும்‌ மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின்‌ உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.54-ல்‌ அமைந்துள்ள காந்திபுரம்‌ நகர பேருந்து நிலையத்தில்‌ இன்று (26.11.2021) கனமழை காரணமாக முதல்‌ பிளாட்பாரத்தில்‌ உள்ள கான்கிரீட்‌ மேற்‌ கூரையிலிருந்து சிமெண்ட்‌ பூச்சு சுமார்‌ (5X4) அளவில்‌ கீழே பெயர்ந்து

விழுந்துள்ளது.

அச்சமயம்‌ அவ்விடத்திலிருந்த இரு பயணிகளுக்கு சிறுகாயம்‌ ஏற்பட்டு, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது இரு பயணிகளும்‌ நல்ல நிலையில்‌ உள்ளனர்‌.

மேற்படி பகுதியில்‌ சேதமடைந்த கான்கிரீட்‌ பூச்சுகளை உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும்‌, பொதுமக்கள்‌ கூடும்‌ மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின்‌ உறுதித் தன்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...