எனவே, விருப்பமுள்ளவர்கள் கட்டண தொகையாக ரூபாய் 5000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் 29ம் தேதி வரை 4 நாட்கள் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி 29ம் தேதி வரை 4 நாட்கள் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது.
கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வ மாளிகையில் காலை 9 மணி முதல் 5 மணி வரை இந்த விருப்பமானது வழங்கப்படும்.
விருப்ப மனுக்கள் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, மாவட்டச் செயலாளர்கள் அம்மன் அர்ஜுனன் எம். எல். ஏ., பி .ஆர் .ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட உள்ளது.
எனவே, விருப்பமுள்ளவர்கள் கட்டண தொகையாக ரூபாய் 5000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
மேலும், ஏற்கனவே விருப்ப மனு வழங்கியதை பெற்றவர்கள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ரசீதை காண்பித்து கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.