துபாயில் சர்வதேச பேஷன் ஷோ: கோவை சிறுவன் முதலிடம்..!

துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் ராணா சிவகுமார் பங்கேற்று முதல் இடம் பிடித்து வெற்றி.


கோவை: கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன், ராணா சிவகுமார், துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் பங்கேற்று முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.



கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ராணா சிவக்குமார். துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவின் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து தேர்வாகி, தற்போது போட்டியில் பங்கேற்று முதல் இடம் பெற்றுள்ளார்.

இது குறித்து, சிறுவன் ராணாவின் தந்தை சிவக்குமார் மற்றும் தாயார் கோமதி கூறியதாவது: மூன்று வயதிலிருந்தே பேஷன் ஷோக்களில் ராணா பங்கேற்று வருகிறார். தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்று, இதுவரை 15-க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளான். அதேபோல, துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் ராணா பங்கேற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சுமார் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். முதல்முறையாக தமிழகத்திலிருந்து ராணா தேர்வு செய்யப்பட்டு இப்போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...