கிணத்துக்கடவு அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கோவை: கிணத்துக்கடவு அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அண்மைக் காலமாகக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
பெண் குழந்தைகளுக்கான குற்றங்களைத் தடுப்பது குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.இ.எல்.சி அரசு உதவி பெறும் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது.

கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிணத்துக்கடவு காவல் நிலைய பெண் காவலர் பவதாரணி, சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசினர்.

தவறான முறையில் யாராவது தங்களிடம் நடந்து கொண்டாலோ, செல்போன் மூலம் தங்களைத் தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசினாலோ காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 1098, 181 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.