பி.ஆர்.நடராஜன் எம்பி தொகுதி நிதியில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை – தண்ணீர் தொட்டி திறப்புவிழா.!!

தொட்டிபாளையம் ஊராட்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை மற்றும் 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டி ஆகியவற்றை வெள்ளியன்று திறந்து பி.ஆர்.நடராஜன் எம்பி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


கோவை: கோவை கீரணத்தம் ஊராட்சி மற்றும் தொட்டி பாளையம் ஊராட்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை மற்றும் 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டி ஆகியவற்றை இன்று மகோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார்.



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.

ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சமுதாயக் கூடங்கள், நியாயவிலைக்கடைகள், தண்ணீர் தொட்டிகள், அங்கன்வாடி கட்டிடங்கள் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து அம்மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார்.



இதன் ஒருபகுதியாகக் கோவை கீரணத்தம் ஊராட்சியில் புதிதாக நியாயவிலைக்கடை அமைப்பதற்கு 12.63 லட்சம் ரூபாயும், வெள்ளமடை ஊராட்சி தொட்டி பாளையத்தில் 14.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும், இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்தது என்றும், இதனையடுத்து இன்று இந்த கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார்.



கோவை கீரணத்தம் பகுதியில் நியாயவிலைக்கடை திறப்புவிழா மற்றும் வெள்ளமடை ஊராட்சி தொட்டி பாளையத்தில் 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டிடங்களைத் திறந்துவைத்து பி.ஆர்.நடராஜன் எம்பி சிறப்புரையாற்றினார்.

இதில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இதில் சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ப.தோ.ராசு என்கிற ஆர்.பழனிச்சாமி, கீரணத்தம் ஊராட்சி மன்ற துணை தலைவரும், சிபிஎம் எஸ்.எஸ்.குளம் கிழக்கு பகுதி செயலாளருமான ஆர்.கோபல், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.கருப்புசாமி மற்றும் உதவிபொறியாளர் சந்திரகலா, பிடிஓ அனிதா, பரமேஷ்வரி, சிபிஎம் எஸ்.எஸ்.குளம் மேற்கு பகுதி செயலாளர் எம்.சண்முகசுந்தரம், வெள்ளமடை பஞ்சாயத்து துணைத்தலைவர் கனேசன், 9 ஆவர்டு சிபிஎம் உறுப்பினர் சந்திரசேகர், 3 ஆவது வார்டு உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் கீரணத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தொட்டி பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...