திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் நூல் விலை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் கூலி உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் உள்ளன.


திருப்பூர்: திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் நூல் விலை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.



சமீபத்தில் ஏற்றப்பட்ட நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் போலவே விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி, அந்த நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய தீரன் தொழிற்சங்க பேரவையை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வழங்கினர். பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் கூலி உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், உள்நாட்டு தேவையை கணக்கில் கொண்டு நூல் மற்றும் பங்குகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...