காவலருக்கு காலில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை..!

விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து காவலருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அ.நிர்மலா பாராட்டினார்.


கோவை:. கோவை அரசு மருத்துவமனையில் காவலருக்கு காலில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அதிவிரைவாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சத்தியமங்கலம் சிறப்பு காவல் பிரிவில் பணிபுரிபவர் தர்மபுரியை சேர்ந்த சந்தோஷ்(34). இவருக்கு சத்தியமங்கலத்தில் கால் பாதத்தில் 2 குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் உள்நோயாளியாக 25 ம் தேதி இரவு 7:30 மணிக்கு, அனுமதிக்கப்பட்டார்.



இதையடுத்து, அவருக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் ரத்த குழாய் பரிசோதனை, இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவசர சிகிச்சை ஆபரேஷன் தியேட்டரில், மயக்கம் மருந்து கொடுத்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆலோசனையின் பெயரில் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை துறை இயக்குனர் பேராசிரியர் செ.வெற்றிவேல் செழியன் தலைமையில் டாக்டர் விவேகானந்தன், டாக்டர் ரமணன், டாக்டர் சுரேந்தர், டாக்டர் குமரவேல், மயக்க மருந்து டாக்டர் சுதாகர் மற்றும் செவிலியர் ஜோதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட 2.30 மணி நேரத்திற்குள் அந்த இரண்டு குண்டுகளும், ரத்தக் குழாய் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பின்றி நவீன ஊடுகதிர் (C-arm) கருவியை பயன்படுத்தி வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், விரைவாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து காவலருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியவர்களை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அ.நிர்மலா பாராட்டினார்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...