காந்திபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.!!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி பழுதடைந்து இடிந்து விழுந்ததில், பேருந்திற்காகக் காத்திருந்த 2-பெண்கள் காயமடைந்தனர். சேதமடைந்து காணப்படும் பிற பகுதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி பழுதடைந்து இடிந்து விழுந்ததில், பேருந்திற்காகக் காத்திருந்த 2 பெண்கள் காயமடைந்தனர். பேருந்து நிலையத்தில் சேதமடைந்து காணப்படும் பிற பகுதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் நகரப் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினத்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.



இன்று பேருந்திற்காகப் பயணிகள் சிலர் காத்திருந்த போது, வாளையாறு செல்லும் பேருந்துகள் நிற்கும் பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.



இந்த இடிபாடுகள் விழுந்ததில் பெண் பயணிகள் இருவர் லேசான காயம் அடைந்தனர். அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



கூரையின் ஒரு பகுதி மட்டும் விழுந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஒருவேளை முழு கூரையும் இடிந்து விழுந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என சக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்ட இந்த பேருந்தின் பெரும்பாலான பகுதிகள் உரியப் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த பகுதிகளைச் சீரமைக்கவோ அல்லது கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...