முழு கொள்ளளவை எட்டிய உப்பாறு அணை: வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்.!!

கனமழை காரணமாக 20-ஆண்டுகளுக்குப் பிறகு உப்பாறு அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: கனமழை காரணமாக 20-ஆண்டுகளுக்குப் பிறகு உப்பாறு அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்பாறு அணையின் முழு கொள்ளளவு இருபத்துநான்கு அடியாகும்.

இந்த உப்பாறு அணை கடந்த 20-ஆண்டுகளாகத் தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்த நிலையில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் காரணமாக வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.



தற்போது பருவமழை தீவிரமடைந்த நிலையில், 20-ஆண்டுகளுக்கும் மேலாக நீரின்றி காய்ந்து கிடந்த உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணை மற்றும் உப்பாறு அணைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உப்பாறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் மற்றும் திருமூர்த்தி அணையின் உபரி நீர் உப்பாறு அணையை வந்தடைந்தது.



இந்நிலையில் கடந்த 20-ஆண்டுகளுக்குப் பின் தற்போது உப்பாறு அணையில் 21.30 அடி நீர் இருப்பு உள்ளதால் தொடர்ச்சியாக இன்று உப்பாறு அணைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் தனது முழு கொள்ளளவான 24 அடியை எட்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.



மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையிலும் உப்பாறு அணையைப் பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் அணை முழு கொள்ளளவை எட்டிய பிறகு அணையின் பாதுகாப்பு கருதி உப்பாறு அணையிலிருந்து ஆலாம்பாளையம் தொப்பம்பட்டி சின்னிய கவுண்டம்பாளையம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள உப்பாறு அணையின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உப்பாறு அணை நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் உப்பாறு கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...