இல்லம் தேடி கல்வி திட்டம்: கோவையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்..!

மாவட்டம் தோறும், சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 குழுக்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர்.


கோவை: கோவையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

கொரோனா பேரிடர் காலத்தில் இணைய வாயிலாக கல்வி கற்க முடியாமல் பல மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை சரிசெய்யும் பொருட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'கல்வி டிவி'யில் பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. இருப்பினும், பல மாணவர்களுக்கு கற்பித்தல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தன்னார்வலர்கள் உதவியுடன் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, டியூஷன் எடுக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.



இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அதன் செயல்பாடு குறித்தான பல்வேறு சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவி வருகிறது.

எனவே, தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் "இல்லம் தேடி கல்வி" திட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்த திட்டமிடப்பட்டு, அதன்படி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டம் தோறும், சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 குழுக்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர்.



குறிப்பாக, கிராம புறங்களில் அதிக கவனம் செலுத்தி விழிப்புணர்வு நடைபெற உள்ளது. இந்த கலை பயணத்தை மேற்கொள்ள உள்ள கலைக்குழுவினருக்கும், கல்வி துறையினருக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்து, விழிப்புணர்வு பயணத்தை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட கல்வி துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...