கோவையில் கொரோனா இறப்பிற்கான மருத்துவ சான்று பெறுவதில் ஏற்படும் சிக்கலை கையாள குழு அமைப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

கொரோனா தொற்றினால் இறந்த யாருக்கேனும் இறப்பின் காரணத்திற்கான சான்று கிடைக்கப் பெறவில்லை என்றால், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.


கோவை: கோவையில் கொரோனா இறப்பிற்கான மருத்துவ சான்று பெறுவதில் ஏற்படும் சிக்கலை கையாள குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

பொதுவாக இறப்பு சான்றிதழ்களில் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால், கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகளுக்கு நிவாரண தொகை மற்றும் பல சலுகைகள் பெற இறப்பின் காரணம் அவசியமாகிறது.

எனவே, இறப்பின் காரணத்தை அறிய மருத்துவமனைகளில் நிகழும் இறப்புகளுக்கு படிவம் 4ம், வீடுகளில் நிகழும் இறப்பிற்கு 4 விலும் இறப்பின் காரணத்திற்கான சான்று வழங்கப்படுகிறது. இந்த இறப்பின் காரணத்திற்கான சான்றை பிறப்பு, இறப்பு பதிவாளர்களிடம் சம்மந்தப்பட்ட நபர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இறப்பிற்கான மருத்துவ சான்றிதழ் (4/44) கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் கொரோனா இறப்பிற்கான காரணத்தில் திருப்தி இல்லாதவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய ஆவணங்களுடன் மனு அளிக்கலாம்.

இதற்காக, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட பிறப்பு இறப்பு - பதிவாளர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர், இணை இயக்குனர் சுகாதார பணிகள், மருத்துவக் கல்லூரி முதல்வர், துணை இயக்குனர் சுகாதார பணிகள் மற்றும் மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் ஆகியோர் அடங்கிய கொரோனா இறப்பினை உறுதி செய்யும் குழு (COVID -19 DEATH ASCERTAINING COMMITTEE) அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பெறப்படும் மனுக்களை இந்த குழு பரிசீலனை செய்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு உரிய படிவத்தில் இறப்பின் காரணத்திற்குரிய சான்று வழங்கப்படும்.

எனவே, கொரோனா தொற்றினால் இறந்த யாருக்கேனும் இறப்பின் காரணத்திற்கான சான்று கிடைக்கப் பெறவில்லை என்றால், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...