பொள்ளாச்சி அருகே மீன் வளர்ச்சி கழகம் சார்பில் ஆழியாறு அணையில் 3 லட்சம் மீன்குஞ்சுகளை விடும் பணிகள் தீவிரம்..!

இதில் கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய ரகங்களை சார்ந்த சுமார் 3 லட்சம் மீன்குஞ்சுகளை அணையில் விடும் பணியில் மீன் வளர்ப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் 3 லட்சம் மீன்குஞ்சுகளை விடும் பணிகள் மீன் வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரில் மீன் வளர்ச்சி கழகம் சார்பில், நுண் மீன் வளர்ப்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இதில் பவானி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன்குஞ்சுகள் வாங்கிவந்து, வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள தொட்டிகளில் நுண் மீன் குஞ்சுகள் பத்து சென்டிமீட்டர் நீளம் அளவுக்கு வளர்க்கப்படுகிறது.

கடலை புண்ணாக்கு, நெல் தவிடு ஆகியவை மீன் குஞ்சுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன. மீன்கள் 10 சென்டிமீட்டர் அளவுக்கு வளர்ந்தவுடன் ஆழியாறு அணை, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட அணைகளில் மீன் குஞ்சுகள் கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்படுகின்றன. அணையில் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகள் ஒரு கிலோ அளவிற்கு வளர்ந்தவுடன் மீன்களைப் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு ஆழியாறு அணையில் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு வந்தனர். நேற்று ஆழியாறு மீன்வளத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு வந்த மீன் குஞ்சுகளை பிடித்து ஆழியாறு அணைக்கு கொண்டு செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதில் கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய ரகங்களை சார்ந்த சுமார் 3 லட்சம் மீன்குஞ்சுகளை அணையில் விடும் பணியில் மீன் வளர்ப்பு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அணையில் விடப்பட்டுள்ள மீன் குஞ்சுகள் ஒரு கிலோ அளவுக்கு எடை வந்தவுடன், மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டு பிடிக்கப்படும் என்றும், பின் மீன் வளர்ச்சித் துறையின் மூலமாக பொதுமக்களின் உணவுத் தேவைக்காக விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...