தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வாங்குவதற்குத் தொழிலாளர்களுக்குக் கடன் வழங்கக்கோரி நூதன முறையில் CITU-வினர் மேட்டுப்பாளையம் ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் மனு அளித்தனர்.
கோவை: தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வாங்குவதற்குத் தொழிலாளர்களுக்குக் கடன் வழங்கக்கோரி நூதன முறையில் CITU-வினர் மேட்டுப்பாளையம் ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் தற்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை கிலோ ரூ.100க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளுக்குக் கூட ஊட்டச்சத்தான பொருட்களை வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்டிக்கும் விதமாகத் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை வாங்குவதற்குத் தொழிலாளர்களுக்குக் கடன் வழங்கக்கோரி நூதன முறையில் CITU பொதுத் தொழிலாளர்கள் சங்கப்பொதுச்செயலாளர் பாஷா தலைமையில் திரண்ட CITU வினர் மேட்டுப்பாளையம் ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சித்திக், செந்தில், ஆனந்தி, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.