கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.!!‌

கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ பிரதீப்‌ குமார்‌ தலைமையில்‌, இன்று அனைத்து துணை ஆணையர்கள்‌, காவல்‌ சரக உதவி ஆணையர்கள்‌ மற்றும்‌ சிறப்புப் பிரிவு உதவி ஆணையர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்‌ நடத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ பிரதீப்‌ குமார்‌ தலைமையில்‌, இன்று அனைத்து துணை ஆணையர்கள்‌, காவல்‌ சரக உதவி ஆணையர்கள்‌ மற்றும்‌ சிறப்புப் பிரிவு உதவி ஆணையர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்‌ நடத்தப்பட்டது.



இதில்‌ கோவை மாநகரில்‌ சட்டம்‌ ஒழுங்கை பேணி காப்பதில்‌ எந்தவித பாரபட்சமும்‌ காட்டாமல்‌, நேர்மையான முறையில்‌ நடவடிக்கை எடுக்கவும்‌, சட்டம்‌ ஒழுங்கை சீர்குலைக்கும்‌, வகையில்‌ நடந்து கொள்பவர்கள்‌, கந்து வட்டி வசூலிப்பவர்கள்‌, கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள்‌, ரவுடி தனம் செய்பவர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை எடுக்கவும்‌, தமிழக அரசால்‌ தடை செய்யப்பட்ட புகையிலை, பான்‌ மசாலா பொருட்கள்‌ விற்பவர்கள்‌ மீதும்‌, கஞ்சா, போதைப் பொருட்கள்‌, போதை ஊசி விற்பனை செய்பவர்கள்‌ மீதும்‌, சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள்‌ மீதும்‌, ஒருங்கிணைத்து சூதாட்டம்‌ நடத்துபவர்கள்‌ மீதும்‌, ஒருங்கிணைத்து விபச்சாரம்‌ செய்யும்‌ நபர்கள்‌ மீதும்‌, பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றச்‌ செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ மீதும்‌ கடும்‌ நடவடிக்கை எடுக்கவும்‌ உத்தரவிட்டார்‌.



மேலும்‌, அனைத்து காவல்துறையினரும்‌, பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்‌, சைபர்‌ குற்றங்கள்‌, போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள்‌ மத்தியில்‌ ஏற்படுத்தவும்‌, காவல்‌ நிலையங்களுக்குப் புகார்‌ அளிக்க வரும்‌ பொதுமக்களிடம்‌ கனிவுடன்‌ நடந்து கொள்ளவும்‌, உடனுக்குடன்‌ தக்க நடவடிக்கை எடுக்கவும்‌ உத்தரவிட்டார்‌.

அனைத்து காவல்‌ ஆய்வாளர்கள்‌, உதவி ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ காவலர்கள்‌ ரோந்து செல்லும்‌ போது காவல்‌ துறை மற்றும்‌ பொதுமக்கள்‌ நல்லுறவு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொள்ளவும்‌ உத்தரவிட்டார்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...