சூலூரில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்.!!

சூலூர் எம்.எல்.ஏ பிபி கந்தசாமி தலைமையில் கள்ள பாளையத்தில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் மூன்று மணி நேரம் நடைப்பெற்றது.


கோவை: சூலூர் எம்.எல்.ஏ பிபி கந்தசாமி தலைமையில் கள்ள பாளையத்தில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் மூன்று மணி நேரம் நடைப்பெற்றது.

சூலூர் எம்.எல்.ஏ பிபி கந்தசாமி தலைமையில் கள்ள பாளையத்தில் மதுக்கடை திறக்கக் கூடாது என கூறி சாலை மறியல் போராட்டம் மூன்று மணி நேரம் நடைப்பெற்ற நிலையில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொச்சின் சாலையில் காத்திருந்தது.

டிஎஸ்பி ஆனந்த ஆரோக்கியராஜ், உதவி ஆய்வாளர்கள் நவநீத கிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், முத்துக்குமார், உளவுத்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமி, வருவாய்த்துறை வட்டாட்சியர் சகுந்தலா, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவு வரவில்லை.

போராட்டக்காரர்கள் மதுக்கடை மண்டல மேலாளர் நேரில் வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் முடியும் என தெரிவித்தனர். மண்டல மேலாளர் மகாராஜன் நேரில் வந்து மதுக்கடையைத் திறக்கப்பட மாட்டாது என உறுதி அளித்தார் இதனை அடுத்து மறியல் செய்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



இந்தப் போராட்டத்தில் திமுக அதிமுக பாஜக இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா இந்துஸ்தான் மக்கள் கட்சி மற்றும் கள்ளப்பாளையம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

மாலை 5 மணிக்கு போக்குவரத்து சீரானது. இதற்கிடையில் மதுப் பிரியர்கள் தாங்கள் 8 கிலோமீட்டர் தூரம் சென்று மது வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் அதிக விலை கொடுத்து முறைகேடாக மது விற்பனை செய்யும் நபர்களிடம் இருந்து வாங்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே தங்களுக்கு மது கடை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மதுப் பிரியர்கள் இடம் பேட்டி எடுத்த செய்தியாளர்களைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வசைபாடினர். மேலும் பத்திரிக்கையாளர் அராஜகம் ஒழிக என கோஷமிட்டனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...