கோவை மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு -நாளை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை..!

அரசு அதிகாரிகள் வரும் வெள்ளியன்று காலை 12.30-மணிக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் டவுன் பிளான் அதிகாரிகள், பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.


கோவை: அரசு அதிகாரிகள் வரும் வெள்ளியன்று காலை 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் டவுன் பிளான் அதிகாரிகள் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

கோவை வரதராஜபுரம் டி மார்ட் அருகே மாநகராட்சி நிலத்தை ஜீ ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி வருவதாக கூறப்படும் நிலையில் இதனை கண்டித்து வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பாதை பறி போகிறது என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அரசு அதிகாரிகளிடம் கூறுகையில், காமராஜர் சாலையில் நிலங்களை ஆக்கிரமித்து, அரசு அதிகாரிகளை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு வருவது தெரிகிறது.

இதனால் மக்கள் செல்லும் பாதை பறிபோகும் என மக்கள் அச்சப்படுகின்றனர். சாலையை ஆக்கிரமிக்கப்படுகிறது என இப்பகுதி மக்கள் ஏற்கனவே மாநகராட்சியிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த மனு மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் காலை முதல் மறியல் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும், வட்டாரத்தை சார்ந்த அனைவரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசு இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் உடனடியாக அதிகாரிகள் நில அளவை செய்ய வேண்டும்.

மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையைக் குறுக்கி அழகுபடுத்தும் நோக்கில் செய்யப்படும் மாற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே இங்கிருந்து மாற்றப்பட்ட பேருந்து நிழல்குடையை பழைய இடத்திற்கே கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.

பொதுமக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த அதிகாரிகள் அவசர அவசரமாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். இதனையடுத்து வட்டாட்சியர் தலைமையில் நில அளவையர் மற்றும் மாநகராட்சி ஏடிபி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அளக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வெள்ளியன்று காலை 12 30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் டவுன் பிளான் அதிகாரிகள் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...