கோவையில் மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கும் அரசாணைக்கு பி.ஆர் நடராஜன் எம்பி வரவேற்பு..!

இதன்படி, இப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் மலைவாழ்படி கிடைப்பது உறுதியாகி உள்ளது.


கோவை: கோவையில் மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கும் அரசு ஆணையை வரவேற்பதாக கோவை எம்.பி., நடராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மலைப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்பட்டு வந்தது. வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ்படி பெறுகின்றனர்.

இந்நிலையில், காரமடை உள்ளிட்ட பல பகுதிகளில் மலைவாழ்படி வழங்கப்படவில்லை. 35 ஆண்டுகளாக மலைவாழ்படி பெறமுடியாமல், சட்ட நடவடிக்கைக்கு சென்றனர்.

இருப்பினும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதுகுறித்து, கோவை எம்.பி., நடராஜன் கடந்த 29ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இத்துறை சார்ந்த பல்வேறு தரப்பினருக்கும் கடிதம் எழுதி, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி காரமடை வட்டார கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காரமடை வட்டாரத்தில் பரளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்படும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

இதன்படி, இப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம், 6 ஆயிரம் ரூபாய் மலைவாழ்படி கிடைப்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து எம்.பி., நடராஜன் கூறுகையில், ''காரமடை வட்டார மலைப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்படவுள்ளதாக அறிந்தேன்.

கல்வித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கவனத்திற்கு வராத பல பள்ளிகள் உள்ளன. உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து விவாதித்து, அனைத்து மலைப்பகுதி பள்ளி ஆசிரியர்களுக்கும் மலைவாழ்படி கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...