கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் இறங்குதளம் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு..!

மேலும், 20 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளது. அனைவருக்கு முறையாக வீடுகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் இறங்குதளம் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை-திருச்சி ரோட்டில் ரெயின்போ காலனி முதல் பங்கு வர்த்தக கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சிங்காநல்லூரில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி உக்கடம் செல்லும் சாலையில் இறங்குவதற்கு வசதியாக உக்கடம் - சுங்கம் பைபாஸ் பகுதியில் இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.



இந்த இறங்கு தளம் அமைய உள்ள இடத்தில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருந்தவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பின்னர் அவர்களுக்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 32 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

இந்நிலையில் மீதம் உள்ள வீடுகளை இடிப்பதற்கான பணி நேற்று நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

இறங்கு தளம் அமைக்கும் பணிக்காக முதல் கட்டமாக 32 குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் வசித்த வீடுகள் இடிக்கப்பட்டன. தற்போது மேலும் 42 குடும்பங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. இதில் சிலருக்கு எந்த இடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன என்ற விபரம் இல்லை. இதனால் இந்த வீட்டை காலி செய்ய முடியாத நிலை உள்ளது.

மேலும், 20 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளது. அனைவருக்கு முறையாக வீடுகள் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...