காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மளிகை கடையை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகள், பள்ளி சத்துணவு மையங்கள், மளிகை கடைகள் என்று உணவு தேடி அலைந்து, கட்டிட சுவரை இடித்து உணவுப் பொருட்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சில நேரங்களில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் குடியிருப்புகளுக்குள் நுழைந்த 12 காட்டுயானைகள் அப்பகுதியில் உள்ள லட்சுமி என்பவரின் மளிகை கடையை உடைத்து, உள்ளே இருந்த உணவு பொருட்களை சாப்பிட்டு கடையின் சுவரை இடித்து உள்ளிருந்த டேபிள் சேர், உணவுப் பொருட்கள் அனைத்து சேதப்படுத்தியது.

கடையில் இரவில் யாரும் தங்கி இருக்காததால் உயிர் சேதம் இல்லை. இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் யானைகள் குடியிருப்புக்குள் வருவது தெரியாமல் இருப்பதால் பொதுமக்களுக்கும் வனவிலங்கு மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.