கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகள் உபயோகப்படுத்திய 'கார்' பொள்ளாச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காரின் உரிமையாளரை சேலத்துக்கு அழைத்து கேரளா போலீஸார் விசாரணை செய்தனர்.
பொள்ளாச்சி: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளிகள் உபயோகப்படுத்திய 'கார்' பொள்ளாச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், காரின் உரிமையாளரைச் சேலத்துக்கு அழைத்து கேரளா போலீஸார் விசாரணை செய்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்சித் கடந்த 15ஆம் தேதி பாலக்காடு பகுதியில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, கேரளா போலீசார் கொலை சம்பந்தமாக விசாரணை செய்து வந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். சஞ்சித் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்ததில் மாருதி 800 கொலைக்குப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
மாருதி 800 பொள்ளாச்சி குஞ்சி பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து ஏடிஎஸ்பி பிஜி பாஸ்கர் தலைமையில், வந்த போலீசார் கார் வாங்கிய முருகானந்ததிடம் விசாரணை செய்ததில் காரின் உதிரிப்பாகங்கள் பிரிக்கப்பட்டு இன்ஜின் நம்பர் மர்ம நபர்கள் எடுத்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கார் உரிமையாளரைக் கேரளா போலீசார் சேலத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.