கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்..!

ஞாயிற்றுக்கிழமை தோறும் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். மேலும், மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.5 லட்சம் 30 நாட்களுக்குள் கொடுக்க உத்தரவு.



கோவை: கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி, கடந்த 11 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 11ஆம் வகுப்பு படித்த போது, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (31) பாலியல் அத்துமீறலால் தற்கொலை செய்ததாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, ஆசிரியரின் பாலியல் அத்துமீறல் தொடர்பாகப் பள்ளி முதல்வரிடம் மாணவி புகார் அளித்தும் சம்பவத்தை மறைத்து நடவடிக்கை எடுக்காததால் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் (46) மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், பள்ளி முதல்வர் ஜாமீன் கோரி கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை இன்று போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை பள்ளி முதல்வருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக்கூறி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதையும், நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

வழக்கு முதற்கட்ட விசாரணையில் இருப்பதாகவும், ஜாமீன் வழங்கினால் பள்ளி முதல்வர் தலைமறைவாக வாய்ப்புள்ளதாகவும், உயிரிழந்த மாணவி போல் வேறு ஏதேனும் மாணவி அந்தப்பள்ளியில் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என விசாரித்து வருவதால் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசுத்தரப்பில் வாதடப்பட்டது.

இந்த நிலையில், மாணவி உயிரிழந்ததற்கும் முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை என்றும், ஜாமீன் வழங்கவும் முதல்வர் மீரா ஜாக்சன் தரப்பில் வாதாடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பித்தார். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக 30 நாட்களுக்குள் ரூபாய் 5 லட்சம் அரசு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே, 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...