கோவையில் 24X7 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு..!

மேலும், குடிநீர் விநியோகம், குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவு போன்றவற்றைக் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பரிசோதனை செய்தார்.



கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில் 24X7 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., இன்று (24.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 66க்குட்பட்ட மீனா எஸ்டேட் 5வது கிராஸ் வீதியில் 24x7 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.



பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் குழாய் அமைத்த பின்பு சாலை உடனடியாக சீரமைக்கவும் கேட்டுக்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 5க்குட்பட்ட ஹெச்.எஸ். காலனி, எம்.ஜி.ஆர் விதியில் 24x7 திட்டத்தின் கீழ் பகிர்மானக் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும், குடிநீர் போதிய அளவு அழுத்தத்தில் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். அதற்கு குடிநீர் போதிய அளவு அழுத்தத்தில் கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து, குடிநீர் விநியோகம், குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவு போன்றவற்றைக் குறித்து பரிசோதனை செய்யப்பட்டதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் பரிசோதனை செய்தார்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆணையாளர் செந்தில்குமார் இரத்தினம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், 24X7 உதவி செயற்பொறியாளர் ராமசாமி, சூயஸ் நிறுவன மேலாளர் முத்துபாபு, உதவி பொறியாளர் எழில் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...