திருப்பூரில் தந்தை இறந்த துக்கத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தாய் மற்றும் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை..!!

தந்தையின் மீது வைத்த பாசம் குறித்து நிரஞ்சன் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் தந்தை இறந்த துக்கத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தாய் மற்றும் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த நாகராஜ், இவருடைய மனைவி ராதா. இவர்களுக்கு நிரஞ்சன் என்ற மகன் உள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த இவர்கள், கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் வசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நாகராஜ் இதய பிரச்சனை காரணமாக உயிரிழந்துவிட்டார். நிரஞ்சன் கோவையில் உள்ள தனியார் மென்பொருள் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நாகராஜ் உயிரிழந்த நாள் முதலே ராதா மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவருமே மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆறுதலால் மன உளைச்சலோடு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நிரஞ்சனின் நண்பர் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார். கதவை திறக்காததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராதா மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

பின்னர், உடனடியாக அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தந்தையின் மீது வைத்த பாசம் குறித்து நிரஞ்சன் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அக்கடிதத்தில் , "தந்தை இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை என்றும் நாங்கள் வாழ முயற்சித்தோம். ஆனால்.... " என்று எழுதியுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...