திருப்பூர் அருகே அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் படுகாயம் - சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதி..!

படுகாயமடைந்த 10 பேருக்கு அவிநாசி அடுத்து அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு சொகுசு பேருந்தில் 44 பேர் பயணித்தனர். இதனிடையே, பேருந்தானது திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய ஆறு வழி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தானது தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் சொகுசு பேருந்தில் பயணித்த 44 பயணிகளில் 6 பெண்கள், 8 ஆண்கள் என 14 பேர் பலத்த காயமடைந்தனர். படுகாயமடைந்த 10 பேருக்கு அவிநாசி அடுத்து அரசு மருத்துவமனையிலும், மற்ற 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...