முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கல்.!!

62-ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர்.


கோவை: 62-ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர்.

பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணம் ஜவுளி தொழில் துறையினருக்கு மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. கடந்த 62 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ஜவுளிதொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சனை குறித்து அறிந்து உடனடியாக பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.



வரலாற்று சிறப்புமிக்க இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் இன்று இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின்(CITI)தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(SIMA) தலைவர் ரவிசாம், தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, அருள்மொழி உள்ளிட்ட ஜவுளி தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறி தமிழக ஜவுளித்துறை சார்பில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...