இஸ்லாமிய கூட்டமைப்பினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.!!

சிறைவாசிகள் விடுதலை குறித்து கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


கோவை: சிறைவாசிகள் விடுதலை குறித்து கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

கோவைக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்று உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலினை நேற்று இரவு கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் மூன்று பேர் சிறைவாசிகள் விடுதலை குறித்துச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், இரவு முதலமைச்சர் சுற்றுப் பயணத்தை முடித்து தாமதமான நிலையில் இன்று காலை நேரம் ஒதுக்கப்பட்டது.

ஒதுக்கப்பட்ட நேரத்தில் கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கி இருக்கும் இடத்திற்கு இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க மூன்று கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜி இனாயத்துல்லாஹ், மஜக சுல்தான் அமீர், தமுமுக சாதிக் அலி செல்வதற்கு அனுமதி வழங்கி முதலமைச்சர் அறைக்குள் சென்றனர்.

முதலமைச்சர் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை அறைக்குள் அழைத்து அமர வைத்து கோரிக்கைகளைக் கேட்டார்.

அப்போது கூட்டமைப்பு நிர்வாகிகள் சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை குறித்தும் அதில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை ஆகும் வண்ணம் மாற்றி அமைக்க வேண்டும் என்ற தெளிவாகக் கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

பெரிய சுற்று பயண நடுவே கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரம் ஒதுக்கி உட்கார வைத்து அனைத்தும் கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது குறித்து உடனடியாக பார்ப்பதாகத் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-இஸ்லாமிய சமுதாயத்தின் கோரிக்கையைச் சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் இடத்தில் நேரம் ஒதுக்கிக் கேட்ட முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

உரிய முயற்சி செய்து சரியான நேரத்தில் கோரிக்கை வைக்கப் பல முயற்சிகளைச் செய்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கும் இந்த சந்திப்பதற்கு உரிய முயற்சி எடுத்துக் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...