நம்பியூரில் நாட்டுக்கோழி பண்ணை நடத்தி 1.50-கோடி மோசடி: 2-பேருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனை.!!

நம்பியூரில் நாட்டுக்கோழி பண்ணை நடத்தி 1.50-கோடி மோசடி செய்த வழக்கில் 2-பேருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடியே 65-லட்சத்து 60-ஆயிரம் அபராதம் விதித்து டான் பிட்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.


ஈரோடு: நாட்டுக்கோழி பண்ணை நடத்தி 1.50 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டான் பிட்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் ஹெல்தி பவுல்ட்டரி பார்ம்ஸ் நம்பியூரில் இயங்கிவந்த நாட்டுக்கோழி பண்ணை நிறுவனத்தை கார்த்திகா 24, மணிகண்டன் 27, முருகன் 31, பிரபு 22, சதீஷ்குமார் 25, ராமசாமி 55, ஜெய சாமுண்டீஸ்வரி 49, ராஜேந்திரன் 49 ஆகியோர் நடத்தி வந்தனர்.

அவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்து நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை மூலம் முதலீட்டாளர்களுக்கு இரண்டு மடங்கு பணம் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி மொத்தம் 99 முதலீட்டாளர்களிடம் ஒரு கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ஏமாற்றி தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் கோபி தாலுகா கூட கரையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் 12.12.2012 -ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் பொன்னுச்சாமி என்பவரால் நம்பியூர் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு காவல் ஆய்வாளர் முருகன் வணிக குற்ற புலனாய்வு பிரிவு ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அவர்களால் புலன் விசாரணை மேற்கொண் கொள்ளப்பட்டது.

வழக்கில் 13.12.2013 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த வழக்கில் மொத்தம் 99 சாட்சிகளை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி இன்று (23-ஆம் தேதி) தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஏ 3, ஏ6 ஆகிய இருவருக்கும் சேர்த்து ஒரு கோடியே 65 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...